Idhayam Matrimony

ஆந்திரா, தெலுங்கானா மழை பாதிப்பு: காப்பீட்டு கோரிக்கைகளை விரைந்து: முடிக்க நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      இந்தியா
Nirmala-Seetharaman 2023-04-06

புது டெல்லி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காப்பீட்டு கோரிக்கைகளை விரைவாக முடிக்க சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யுமாறு, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக பயிர்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. காப்பீடு செய்யப்பட்டவற்றுக்கு உரிய இழப்பீடை விரைவாக வழங்க காப்பீட்டு நிறுவனங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்யுமாறும், உரிமை கோரல் செயல்முறைகளை எளிதாக்கி உரிமைகோரல்களை விரைவாக தீர்க்குமாறும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு ஆதரவை வழங்கவும், பாலிசிதாரர்கள் தங்கள் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய நோடல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்களை விளம்பரப்படுத்த காப்பீட்டு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து