எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் வீட்டில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
கடந்த மாதம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 வயது பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதற்கிடையே சந்தீப் கோஷ் மற்றும் அவரது பெலியாகட்டா வீடு உட்பட அவரது மூன்று கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களிலும், ஹவுரா மற்றும் சுபாஸ்கிராமில் உள்ள இரண்டு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
மருத்துவமனையின் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பிரசூன் சாட்டர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
சந்தீப் கோஷ் தனது பதவிக் காலத்தில் மருத்துவமனையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சி.பி.ஐ) கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கை பதிந்து, அவரது சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறது. முக்கிய எலக்ட்ரானிக் ஆதாரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025