எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 11 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகின் உரிமையாளர் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகவும் பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று (செப்.6) உத்தரவிட்டுள்ளது.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த சாந்தி பழனிசாமி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற நாகரத்தினம், சஞ்சய், பிரகாஷ், சுதந்திர சுந்தர், சந்துரு, ரமேஷ், ஆனந்தவேல், சிவராஜ், வர்ஷன், சுமன், ராஜேந்திரன் ஆகிய 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதியன்று சிறைப்பிடித்தனர். இந்த 11 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை, பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷாந்தன் இந்த 11 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் 11 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும்,2025 பிப்.14ம் தேதி அன்று படகின் உரிமையாளர் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். விடுதலை செய்யப்பட்ட 11 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025