Idhayam Matrimony

வக்பு திருத்த சட்ட மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் 18-ம் தேதி நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      இந்தியா
Parliament 2023 05 27

Source: provided

புதுடெல்லி : வக்பு திருத்தச் சட்ட மசோதா  குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் செப்.18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையில், வரும் 18-ம் தேதி, சிறுபான்மையினர் நலத்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் வக்பு திருத்தச் சட்ட மசோதா  நாடாளுமன்ற குழு முன்பாக ஆஜராகும் சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய இருக்கின்றனர். வரும் 19-ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு, நிபுணர்கள் மற்றும் இந்த விவகாரம் தொடர்பானவர்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற இருக்கிறது.

அதை தொடர்ந்து வரும் 20-ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு அஜ்மீரில் உள்ள அகில இந்திய சஜ்ஜதனசின் கவுன்சில், டெல்லியில் உள்ள முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் மற்றும் டெல்லியில் உள்ள பாரத் பர்ஸ்ட் ஆகிவைகளிடமிருந்து ஆலோசனைகளைப் பெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்பு திருத்தச் சட்ட மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் நான்காவது கூட்டம் கடந்த 6-ம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்தின் போது, இந்திய தொல்லியல் துறையினைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தனர். 

ஸாகத் பவுண்டேஷன் ஆப் இந்தியா மற்றும் தெலுங்கானா வக்பு போர்டு உள்ளிட்ட சம்மந்தப்பட்டவர்கள் வக்பு திருத்தச் சட்டம்  தொடர்பான தங்களின் பார்வைகள், ஆலோசனைகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து