முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

ஜம்மு : காஷ்மீர் சட்டசபைக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 24 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

காஷ்மீர் சட்டசபைக்கு கடைசியாக 2014-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பிறகு தற்போதுதான் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று 18-ம் தேதி, வரும் 25-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதி ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 

அக்டோபர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் 74 பொதுத் தொகுதிகள், பட்டியில் பிரிவினருக்கான தனித்தொகுதி 7, பட்டியல் – பழங்குடிகளுக்கானது காஷ்மீரில் மொத்தம் 87.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 

முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்நது. முதல் கட்ட தேர்தலில் சுமார் 23 லட்சத்து 27 ஆயிரம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்த உள்ளனர்.

தேர்தல் ஆணையம் 125 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த மக்களவை எம்.பி.யான இன்ஜினியர் ரஷீத் தலைமையிலான அவாமி இதிஹாத் கட்சியுடன் (ஏ.ஐ.பி) கூட்டணி அமைத்து ஜமாத்-இ-இஸ்லாமி (ஜே.இ.ஐ.) அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து