எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வரும் 23-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று வெயில் சுட்டெரிக்கும் என தெரிவித்துள்ள வானிலை மையம், ஒரு சில இடங்களில் இயல்பைவிட 7 டிகிரி பாரன்ஹீட் அதிகரிக்கும் என்றும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வாட்டி வதைக்கும். சென்னையில் 2 நாட்களுக்கு 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூரில் 2 செ.மீ. மழையும், ராணிப்பேட்டை பகுதிகளில் 1 செ.மீ. மழையும் பதிவானது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக மதுரையில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 19.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை எச்சரிக்கையை பொறுத்தவரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் 23-ம் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் ஒரு சில இடங்களில் 2 முதல் 4 செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025