எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டோக்கியோ, லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பல இடங்களில் வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்த நிலையில், அந்த வாக்கி டாக்கிகள் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு அல்ல என்று ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜப்பானிய நிறுவனமான ஐகாம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐகாம் நிறுவனத்தின் ஐ.சி. -வி 82 என்ற மாடல் வாக்கி-டாக்கிகள் 2004 முதல் அக்டோபர் 2014 வரை தயாரிக்கப்பட்டவை. இந்த மாடல் வாக்கி டாக்கிகள் மத்திய கிழக்கு உட்பட உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுதி செய்யப்பட்டன.
இந்த கையடக்க வாக்கி டாக்கியின் உற்பத்தி 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், எங்கள் நிறுவனத்திலிருந்து இத்தகைய வாக்கி டாக்கிகளை நாங்கள் ஏற்றுதி செய்யவில்லை.
அதோடு, இந்த மாடல் வாக்கி டாக்கிகளை இயக்கத் தேவையான பேட்டரிகளின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், போலி தயாரிப்புகளை வேறுபடுத்துவதற்கான ஹாலோகிராம் சீல் இணைக்கப்படவில்லை.
எனவே, இந்த தயாரிப்பு எங்கள் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியாது. வெளிநாட்டு சந்தைகளுக்கான தயாரிப்புகள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மூலமே பிரத்யேகமாக விற்கப்படுகின்றன. ஜப்பானிய பாதுகாப்பு வர்த்தகக் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படியே, ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் எங்கள் நிறுவன தயாரிப்புகளைத் தவிர வேறு எந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களையும் நாங்கள் பயன்படுத்துவதில்லை. அனைத்து வாக்கி டாக்கிகளும் ஒரே தொழிற்சாலையில்தான் தயாரிக்கப்படுகின்றன. நாங்கள் அவற்றை வெளிநாட்டில் தயாரிப்பதில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025