எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி தாம்பரம் மாடம்பாக்கத்தில் வரும் 26-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், மொத்தம் உள்ள 6 வார்டுகளில், 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க.வை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் மக்கள் பணியாற்றி வரும் நிலையில், பொதுமக்களிடையே கட்சியின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எவ்விதப் பணிகளையும் செய்து தராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசும், மாநகராட்சி நிர்வாகமும் அலைக்கழித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
அ.தி.மு.க. ஆட்சியில், மாடம்பாக்கம் மற்றும் சிட்லபாக்கம் பேரூராட்சிகளாக இருந்த போது, குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாடம்பாக்கம் ஏரியில் பெரிய கிணறுகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் மாடம்பாக்கம்-சிட்லபாக்கம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு மக்கள் பயன்பெற்று வந்தனர்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு, தி.மு.க. ஆட்சியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீர் விநியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டது. மாடம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சாலைகளில் இரவு நேரத்தில் எண்ணற்ற மாடுகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் அவ்வப்போது விபத்துகள் நிகழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் நலன் கருதி, மாடம்பாக்கம் பகுதியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டத்தைக் கொண்டு வந்து செயல்படுத்திட வேண்டும். மாடம்பாக்கம் உள்ளிட்ட தாம்பரம் மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் எவ்வித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தராமல், அவசர கதியில் புதிய மாநகராட்சி உருவாக்கப்பட்டு விட்டதாக அறிவித்து விட்டு, அனைத்து விதமான வரிகளையும் பல மடங்கு உயர்த்தி உள்ளதோடு, குடிநீர் இணைப்பே இல்லாத வீடுகளுக்கும் குடிநீர் வரி விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாடம்பாக்கம் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்பட்டது. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் எவ்வித பராமரிப்பும் இல்லாத காரணத்தால் வகுப்பறைகள் பாழ்பட்டுள்ளதோடு, மழைக் காலத்தில் மாணவ, மாணவியர் வகுப்பறைகளுக்கு உள்ளே செல்ல முடியாத அளவிற்கு இருப்பதாகத் தெரிவித்து, இப்பள்ளியில் அனைத்துவித பழுதுகளையும் உடனடியாக சரிசெய்து, கூடுதலாக புதிய வகுப்பறைகளைக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதிவாழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்வதற்கு சிறிதும் அக்கறை இல்லாமல், மக்களை பெருந்துயரத்திற்கு ஆளாக்கி உள்ள தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம் பகுதியில், அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மாமன்ற உறுப்பினர்களாக இருக்கும் 65, 66, 69, 70 ஆகிய வார்டுகளில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றித் தராத தி.மு.க. அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், மாடம்பாக்கம் பகுதி அ.தி.மு.க. சார்பில் வரும 26.9.2024 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில், அண்ணாநகர் - மாடம்பாக்கம் பிரதான சாலையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தலைமையிலும், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம் : தேவஸ்தானம் அறிவிப்பு
09 Nov 2024சபரிமலை : சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா தொடங்கியது
09 Nov 2024தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா மங்கள இசையுடன் நேற்று தொடங்கியது.
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
09 Nov 2024சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மகராஷ்டிராவை காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாற விடமாட்டோம்: பிரதமர் மோடி
09 Nov 2024அகோலா : எங்கு எல்லாம் காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ, அந்த மாநிலங்கள் அக்கட்சியின் ராஜ வம்சத்தின் ஏ.டி.எம்.களாக மாறி விடுகின்றன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
குரூப்-2 தேர்வில் கூடுதலாக 213 காலி பணியிடங்கள் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
09 Nov 2024சென்னை : குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
-
மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு
09 Nov 2024திருவனந்தபுரம், மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்க நடிகர் மோகன்லால் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
-
டிரம்பை கொல்ல சதி: ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
09 Nov 2024வாஷிங்டன் : டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தினால் ஆன மணி கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
09 Nov 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு: தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்
09 Nov 2024விருதுநகர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
-
ரஜினியுடன் நடந்த உரையாடல் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து
09 Nov 2024சென்னை : நடிகர் ரஜினிகாந்துடன் நடந்த உரையாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2024.
09 Nov 2024 -
ஜெலன்ஸ்கியுடன், எலான் மஸ்க்கை தொலைபேசியில் பேச வைத்த டிரம்ப்
09 Nov 2024வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசவைத்தது விவாதப் பொருளாகியுள்ளது.
-
தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு
09 Nov 2024சென்னை : தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
-
மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
09 Nov 2024சென்னை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
09 Nov 2024சென்னை, உயர்கல்வி தொடர்பான தகவல்களை வழங்க தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவ
-
எதிர்க்கட்சிகள் கூறும் குறைகளுக்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்: அமைச்சர் சேகர்பாபு
09 Nov 2024சென்னை, ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள்.
-
பாகிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி
09 Nov 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.
-
தேஜஸ்வி யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
09 Nov 2024சென்னை : பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள்: ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் ராகுல் உறுதி
09 Nov 2024பக்மாரா, ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் போது பெண்களுக்கான கவுரவத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை வீணாக்கிய 20 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தடை
09 Nov 2024சென்னை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை வீணாக்கிய 20 மாணவர்களுக்கு ஓராண்டு மருத்துவப் படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனானில் 12 பேர் பலி
09 Nov 2024பெய்ரூட், கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
-
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் துணை நடிகை மீனா கைது
09 Nov 2024சென்னை, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள துணை நடிகை மீனா சென்னையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
-
மெல்போர்னில் சபாநாயகர் அப்பாவுக்கு உற்சாக வரவேற்பு
09 Nov 2024மெல்போர்ன், மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்களின் சார்பில் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.
-
ஆந்திராவில் நீர்வழி விமான சேவை: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
09 Nov 2024திருமலை : ஆந்திராவில் முதல் முறையாக பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவையை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
-
ராணுவ வீரர்களுடன் த.வெ.க. தலைவர் விஜய் திடீர் சந்திப்பு
09 Nov 2024சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் ராணுவ வீரர்களுடன் திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார்.