முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார் ராகுல்: மத்திய அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      இந்தியா
Amit-Shah 2

ஜம்மு, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் ராகுல் நிற்கிறார் என்று குற்றஞ்சாட்டியுள்ள மத்திய அமைச்சர்  அமித்ஷா, அவர்  நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் 370 ஆவது பிரிவை மீட்டெடுப்பது குறித்து பாகிஸ்தான் அரசும், காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகளின் கூட்டணியும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறியிருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அரசும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே மாதிரியான நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அமித் ஷா விமர்சித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது எக்ஸ் பக்கத்தில் ``370 ஆவது மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகளுக்கு காங்கிரஸும் தேசிய மாநாடு கட்சியும் ஆதரவளிப்பதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கருத்து, காங்கிரஸின் நோக்கத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருவரின் நோக்கங்களும் ஒன்றே என்பதை பாகிஸ்தான் அமைச்சரின் அறிக்கை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனும் நிற்கும் ராகுல் காந்தி, நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்தி வருகிறார்.

விமானத் தாக்குதல்களுக்கு ஆதாரம் கேட்பது அல்லது இந்திய ராணுவத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துகளை கூறுவது என எதுவாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தானும் ஒரே மாதிரியாகவே இருந்து வருகின்றன. ஆனால், மத்தியில் மோடி தலைமையிலான அரசு இருப்பதை, காங்கிரஸ் கட்சியும் பாகிஸ்தானும் மறந்துவிட்டன. எனவே, காஷ்மீரில் 370 ஆவது பிரிவு மீண்டும் வரப்போவதில்லை; பயங்கரவாதமும் வரப்போவதில்லை’’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து