எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளது.
பந்துவீச்சு தேர்வு...
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் சாண்டோ பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டகாரரான ரோகித் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதனைதொடர்ந்து களமிறங்கிய கில் 8 பந்துகளை சந்தித்த நிலையில் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இருவரையும் ஹசன் மக்மூத் காலி செய்தார். பின்னர் வந்த விராட் கோலியும் தாக்குப்பிடிக்கவில்லை. 6 ரன்களில் ஹசன் மக்மூத் பந்து வீச்சிலேயே ஆட்டமிழந்தார்.
நிதான ஆட்டம்...
இந்த இக்கட்டான சூழலில் கை கோர்த்த ஜெய்ஸ்வால் - பண்ட் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அணியை ஒரளவு சரிவிலிருந்து மீட்டனர். ரிஷப் பண்ட் தனது பங்குக்கு 39 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து வந்த கே.எல். ராகுல் 16 ரன்களில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களில் கேட்ச் ஆனார்.
அஸ்வின் - ஜடேஜா....
பின்னர் ஆல் ரவுண்டர்களான அஸ்வின் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தனர். இருவரும் பொறுப்புடனும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடினர். இதனால் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்தது. அபாரமாக விளையாடிய அஸ்வின் சதமடித்து அசத்தினார் மறுமுனையில் அரைசதம் அடித்த ஜடேஜா 86 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் சரிவிலிருந்து மீண்ட இந்தியா முதல் நாளில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
புதிய சாதனை
144 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை அஸ்வின் - ஜடேஜா பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றினர். 7-வது விக்கெட்டுக்கு கை கோர்த்த இருவரும் இதுவரை 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வங்காளதேசத்திற்கு எதிராக இந்தியா தரப்பில் 7-வது விக்கெட் அல்லது அதற்கு கீழே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன்னர் சச்சின் - ஜாகீர்கான் இணைந்து 10-வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள அஸ்வின் - ஜடேஜா ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.
சாதனை பட்டியலில்....
இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் சென்னை மைதானத்தில் அஸ்வின் அடித்த 2-வது சதமாக இது பதிவானது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் குறிப்பிட ஒரு மைதானத்தில் 2 சதம் மற்றும் குறைந்தபட்சம் இருமுறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக அஸ்வின் இணைந்துள்ளார்.
அந்த பட்டியல் வருமாறு., 1. சோபர்ஸ் - ஹெடிங்லி மைதானம், 2.கபில் தேவ் - சென்னை மைதானம், 3.கிறிஸ் கெய்ர்ன்ஸ் - ஆக்லாந்து மைதானம், 4. இயன் போத்தம் - ஹெடிங்லி மைதானம், 5. அஸ்வின் - சென்னை மைதானம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025