எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : வழக்கு விசாரணையின்போது, பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஒருவர் தெரிவித்த ஆட்சேபனைக்குரிய, சர்ச்சையான கருத்து குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய அமர்வு, வழக்கு விசாரணையின் போது கர்நாடகா ஐகோர்ட் நீதிபதி வேதவியாசசார் ஸ்ரீஷானந்தா கூறிய கருத்துக்களைத் தெரிந்து கொள்வதற்காக நேற்று காலை கூடியது. மேலும் இந்த அமர்வு சம்மந்தப்பட்ட நீதிபதியின் கருத்துக்கள் குறித்து ஐகோர்ட்டிடம் அறிக்கை கேட்டுள்ளது.
இது குறித்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட் கூறுகையில்,
கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையின் போது நீதிபதி தெரிவித்த கருத்துகள் ஊடக செய்திகள் மூலம் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து ஐகோர்ட் நீதிபதியிடம் உத்தரவு பெற்று அறிக்கை சமர்ப்பிக்கும் படி உயர் நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
ஐந்து பேர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூரிய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் நாங்கள் சில வழிகாட்டுதல்களை வழங்கலாம் என்று தெரிவித்திருந்தனர்.
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், அறிக்கை சுப்ரீம் கோர்ட்டின் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணை புதன் கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிலத்தின் உரிமையாளர் - குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீஷானந்தா பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக வெறுப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் .இது தொடர்பான வீடியோக்கள் வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-01-2025
15 Jan 2025