Idhayam Matrimony

திருப்பதி லட்டு விவகாரம்: ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்கும் மத்திய அரசு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      இந்தியா
JP-Natta 2024-03-20

Source: provided

புதுடெல்லி : திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசிடம் கேட்டுள்ளேன்  என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: 

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டு கொழுப்பு கலப்பு தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசினேன். தற்போதைய நிலை குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். 

அறிக்கை ஆய்வு செய்யப்பட்டு தவறு செய்தவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச்செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கு பிறகு, விரிவான தகவல்களுடன் அறிக்கை அளிக்கும்படி தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து