Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கத்தை முடக்கிய ஹேக்கர்கள்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      இந்தியா
Hackers 2024-09-01

Source: provided

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின்  யூடியூப் பக்கத்தை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர். அதில் கிரிப்டோ கரன்சியை புரொமோட் செய்யும் வகையிலான வீடியோ இடம்பெற்றுள்ளன.

சுப்ரீம் கோர்ட்டின் அரசியலமைப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் வழக்குகள் மற்றும் பொது நலன் சார்ந்த வழக்கு விசாரணைகளை சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் சேனலில் ஸ்ட்ரீம் செய்வது வழக்கம். அண்மையில் கூட கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு விசாரணை நேரலையில் இதில் ஸ்ட்ரீம் ஆனது. இந்தச் சூழலில் தான் ஹேக்கர்கள் அதை ஹேக் செய்துள்ளனர்.

தற்போது ஹேக் செய்யப்பட்ட இந்தப் பக்கத்தில் அமெரிக்காவின் ரிப்பில் லேப்ஸின் எக்ஸ்ஆர்பி கிரிப்டோகரன்சியின் புரொமோஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த யூடியூப் சேனல்களை ஹேக்கர்கள் முடக்கி, அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி முறைகேடு மேற்கொள்வது தொடர்பாக ரிப்பில் லேப்ஸ் நிறுவனம் யூடியூப் தரப்புக்கு புகார் அளித்துள்ளது. 

இந்தச் சூழலில் ஹேக் செய்யப்பட்ட யூடியூப் பக்கத்தை மீட்கும் பணியில் சுப்ரீம் கோர்ட்டின் தொழில்நுட்பப் பிரிவு மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து