எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன.
8 அணிகள்...
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
துபாயில் இந்திய அணி ...
பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா...
இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அடங்கிய பட்டியலை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வங்கதேச, நியூசிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் அடங்கிய பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி விபரம்; பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஷ், மார்னஸ் லபுசேன், மிட்சேல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மேத்தீவ் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.
தென்ஆப்பிரிக்கா...
பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:- பவுமா (கேப்டன்), டோனி டி சார்சி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ரபடா, ரையன் ரிக்கெல்டான், ஷம்சி, ஸ்டப்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்
ஆப்கானிஸ்தான்...
ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான இப்ராஹிம் சத்ரான் நீண்ட நாட்கள் கழித்து இடம் பிடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணி விவரம் பின்வருமாறு:- ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், ஏ.எம்.கசன்பர், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, பரித் மாலிக், நவீத் சத்ரான். ரிசர்வ் வீரர்கள்: தர்வீஷ் ரசூலி, நங்யால் கரோட்டி, பிலால் சமி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |