எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வகையில், ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து ரூ.86. 61 காசுகளுக்கு வணிகமானது.
நேற்று வணிகம் நிறைவடைந்தபோது, ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து 86.61 என்ற அளவில் இருந்தது. அமெரிக்காவின் வலுவான பொருளாதார புள்ளி விவரங்களும், 10 ஆண்டுகால வைப்பு நிதிகளின் ஈவுத்தொகை 5 சதவீதத்தை நெருங்கி வருவதும், அமெரிக்கப் பத்திர விற்பனையை அதிகரித்து வருவதன் எதிரொலியாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நேற்று ஒரே நாளில் 57 காசுகள் சரிந்து ரூ.86. 61 காசுகளுக்கு வணிகமானது.
கடைசி வணிக நாளான கடந்த வெள்ளிக்கிழமை ரூபாய் மதிப்பு 14 காசுகள் சரிந்து, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.86 ஆக முடிந்திருந்தது. இந்த வீழ்ச்சி நிலையே வாரத் தொடக்கமான நேற்றைய வணிக நேரத் தொடக்கத்திலும் காணப்பட்டது. வணிகம் தொடங்கியதுபோது, இந்திய ரூபாய் மதிப்பு 86.12 ஆக இருந்து, படிப்படியாக வீழ்ச்சியடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
பங்குச் சந்தையில் உள்ளூர் முதலீட்டாளர்களிடையே நிலவிய எதிர்மறையான நிலை மற்றும் அந்நிய நிதி முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை ரூபாய் மதிப்பு சரிந்ததற்கான காரணங்களாகவும் சொல்லப்பட்டன. இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் கச்சா எண்ணெய் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 2 weeks ago |