முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹவுஸ் மேட்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளீடு

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      சினிமா
House-mates 2025-02-11

Source: provided

கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கும் படம் ஹவுஸ் மேட்ஸ், இவர் ஏற்கனவே கனா, தும்பா போன்ற படங்களில் நடித்திருக்கிறார், மேலும், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். T. ராஜவேல் இயக்கியிருக்கும் இப்படத்தை PLAYSMITH STUDIOS சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து SOUTH STUDIOS - இயக்குனர் S.P.சக்திவேல் படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். M.S.சதீஷ் ஒளிப்பதிவை கவனிக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்  ஒரு அபார்ட்மெண்டை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை மையக்கருவாக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. ஃபேண்டஸி, ஹாரர் காமெடி என அனைவரும் ரசிக்கும் வகையில் படம் உருவாகி இருப்பாதாக அறிவித்துள்ள படக்குழு கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என தெரிவித்துள்ளது

அனைத்து தரப்பும் ரசிக்கும்  படியான புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “

உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து  தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES).

இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கிறார் , இவர் ஏற்கனவே கனா , தும்பா போன்ற படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் . விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில்  காளி வெங்கட் அவர்களும் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இத்திரைப்படத்தை  T. ராஜவேல் எழுதி , இயக்கி இருக்கிறார். இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்களிடம் இணை இயக்குனர் ஆகவும் , சமீபத்தில் வந்து பெரும் வெற்றி பெற்ற “DEMONTE COLONY 2 “ படத்தின் எழுத்தாளர் குழுவில்   பணியாற்றி இருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது . இத்திரைப்படத்தை PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் அவர்கள் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் (SOUTH STUDIOS ) அவர்கள் படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். M.S.சதீஷ் அவர்கள் ஒளிப்பதிவு இயக்குனராக பணியாற்றிஉள்ளார் . நேரம் , பிரேமம் படங்களுக்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார் .

படத்தின் மையக்கரு ஒரு அபார்ட்மெண்டை சுற்றிலும் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாகவும் , மிடில் கிளாஸ் குடும்பங்களின் அன்றாட உணர்வுகளை பிரதி பலிக்கும் வகையிலும் , *படம் முழுக்க முழுக்க ஃபேண்டஸி, ஹாரர் என அனைவரும் விரும்பி பார்க்கும் வகையிலும் , குடும்பமாக சென்று ரசிக்கும் வகையிலும் *படமாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன .கோடை விடுமுறையில் படம் திரைக்கு வரும் என படக்குழு தெரிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து