Idhayam Matrimony

யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு

செவ்வாய்க்கிழமை, 11 பெப்ரவரி 2025      இந்தியா
UPSC 2023-05-23

Source: provided

புதுடில்லி: யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பணிகளுக்கான யு.பி.எஸ்.சி.  சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் ஐப்எஸ் தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி இறுதியில் வெளியானது. இதற்கான விண்ணப்பப் பதிவு நேற்றுடன் (11.02.2025) முடிவடையும் நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் பிப்ரவரி 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.

யு.பி.எஸ்.சி.  குடிமை பணிகள் மற்றும் இந்திய வன சேவை தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://upsconline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஓ.டி .ஆர். ப்ரொபைல் பதிவு செய்து, பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

முதல்நிலை தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களுக்கு நேரடியாக யு.பி.எஸ்.சி. -யை 011-23385271/011-23381125/011-23098543 ஆகிய தொலைப்பேசி எண்களில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து