எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
கூட்டத்தொடர்...
தமிழக சட்டப்பேவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார்.
வருவாய் வரவுகள்...
கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு போன்ற தகவல்களை அவர் வெளியிட இருக்கிறார். அதேபோல், 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அளிக்கவுள்ளார்.
புதிய திட்டங்கள்...
அடுத்த 2026-ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டைதான் இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். எனவே தற்போது தமிழக அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்தான் முழுமையாக இருக்கும். அதனால் இந்த பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு தீட்டி வருகிறது. அந்த வகையில், ஏற்கனவே உள்ள திட்டங்களில் அளிக்கப்படும் உதவித்தொகை இந்த பட்ஜெட் மூலம் அதிகரிக்கப்படுமா? உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா? இலவசமாக பெண்கள் பயணிக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா? போன்ற கேள்விகளை பெண்கள் மத்தியில் பட்ஜெட் எழுப்பியுள்ளது.
அலுவல் ஆய்வு கூட்டம்...
இந்த பட்ஜெட் உரையை சட்டசபையில் 2 மணி நேரம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு படிப்பார். அவர் படிக்க படிக்க அந்த தகவல்கள் நேரலையில் வெளியிடப்படும். அவையில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் பட்ஜெட்டை எம்.எல்.ஏ.க்கள் வாசிப்பார்கள். பட்ஜெட்டை அமைச்சர் வாசித்து முடித்ததும் அவையின் அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுக்கு வரும். அதன் பின்னர் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் நடத்தப்படும். அவையை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்களை எடுக்க வேண்டும்? என்பது உள்பட அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் வெளியிடுவார்.
பட்ஜெட் மீது விவாதம்...
பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் மறுநாளில் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். அந்த வகையில் வேளாண்மை பட்ஜெட் நாளை (15-ம் தேதி - சனிக்கிழமை) தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 17-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடங்கும். அப்போது சட்டசபையில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் எம்.எல்.ஏ.க்கள் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். 4 அல்லது 5 நாட்கள் இந்த விவாதம் நடைபெற்று, எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளுக்கு நிதித்துறை அமைச்சர் பதில் அளித்து பேசுவார். அதன் பின்னர் சில நாட்கள் இடைவெளி விடப்பட்டோ அல்லது தொடர்ச்சியாகவோ சட்டசபை நடைபெறும். அப்போது ஒவ்வொரு அரசுத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் மீது எம்.எல்.ஏ.க்களின் விவாதம் நடத்தப்படும்.
துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு....
அலுவல் ஆய்வுக்குழு முடிவு செய்யும் தேதிகளில் அந்தந்த துறைக்கான விவாதம் நடத்தப்பட்டு, அன்றே அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். பின்னர் துறைகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு, அந்தத் துறைக்கு நிதி ஒதுக்கப்படும். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் என்று கூறப்படுகிறது. 2025-2026-ம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மற்றும் 2024-2025-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி) ஆகியவை வரும் 21-ம் தேதியன்று அவைக்கு அளிக்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
14 Mar 2025மும்பை : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது.
இந்திய அணி வெற்றி...
-
அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி மறுப்பு: சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அறிவிப்பு
14 Mar 2025சென்னை, அமலாக்கத் துறை உள்நோக்கத்தோடு, ஆதாரங்கள் ஏதுமின்றிவெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாகவும் உரிய சட்டநடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர
-
5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் தங்கம் தென்னரசு
14 Mar 2025சென்னை, 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 10 புதிய கலை கல்லூரிகள்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, தமிழகத்தின் 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்,” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்
14 Mar 2025சென்னை ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம், ஒசூர், விருதுநகரில் புதிய டைடல் பூங்கா, மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா, 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட
-
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட முடிவு
14 Mar 2025சென்னை, “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26-ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்,” என்று தம
-
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபரின் நிபந்தனைகள்
14 Mar 2025மாஸ்கோ : 30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.
-
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டசபையில் வரும் 17-ம் தேதி வாக்கெடுப்பு
14 Mar 2025சென்னை, அ.தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து (17-ம் தேதி) திங்கட்கிழமை விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்து
14 Mar 2025மும்பை : மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
-
கருணாநிதி நினைவிடத்தில் தங்கம் தென்னரசு மரியாதை
14 Mar 2025சென்னை, 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று
-
ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
14 Mar 2025சென்னை, சென்னையில் நேற்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
தமிழக பட்ஜெட்: அரசியல் கட்சியினர் கருத்து
14 Mar 20252025 - 26-ம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் இது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
-
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ.1,243 கோடி வருவாய் ஈட்டிய இந்தியா
14 Mar 2025புதுடெல்லி : வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ. 1,243 கோடி வருவாய்யை இந்தியா ஈட்டியுள்ளது.
-
ஐ.பி.எல். டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம்
14 Mar 2025புதுடெல்லி : ஐ.பி.எல். 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு ஜாமீன்
14 Mar 2025மதுரை : சிறுமி பாலியல் வழக்கில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவர் ஷாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் முறைகேடு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
14 Mar 2025சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
-
பணிப்பெண்கள் மீது பயணி தாக்குதல்: அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
14 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் சவன்னா விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
-
தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் : முதல்வருக்கு அன்பில் மகேஷ் பாராட்டு
14 Mar 2025சென்னை, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.
-
தமிழகத்தின் கடன் ரூ.9 லட்சம் கோடியாக மேலும் அதிகரிப்பு
14 Mar 2025சென்னை, கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது மேலும் 1 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
-
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
14 Mar 20251) 6,100 கி.மீ. நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,100 கோடியில் மேம்படுத்தப்படும்.
-
வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
14 Mar 2025டாக்கா : 2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
சென்னை, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, சென்னை, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நட
-
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு கு
-
காலை உணவுத் திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-03-2025.
14 Mar 2025