முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

1) 6,100 கி.மீ. நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,100 கோடியில் மேம்படுத்தப்படும்.

2) அரசு பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பு நிதி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்.

3) அரசுப் பொறியியல் கல்லூரிகளில் திறன்மிகு மையங்கள் ரூ.50 கோடி செலவில் உருவாக்கப்படும்.

4) 1 லட்சம் மகளிரைத் தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும்.

5) பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய ரூ.75 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

6) ஒரகடம் செய்யாறு தொழில் வழித்தடம் ரூ.250 கோடியில் செயல்படுத்தப்படும்.

7) ரூ.150 கோடியில் புராதானக் கட்டிடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்

8)  ரூ.2,100 கோடியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் சீரமைக்கப்படும்.

9) ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

10) பழங்குடியினர் வாழ்வாதாரக் கொள்கைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

11) பெற்றோர் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.

12) ரூ.125 கோடியில் ஆயிரம் ஆண்டு பழமையான கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ளப்படும்.

13) பழமையான தேவாலயங்களைப் புதுப்பிக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

14) 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

15) அனைத்து மாநகராட்சிகளிலும் முதல்வர் படைப்பகம் அமைக்கப்படும். 

16)  ரூ.50 கோடியில் வியன் திறன்மிகு மையம் அமைக்கப்படும்.

17) ரூ.70 கோடியில் 700 பேருந்துகள் இயற்கை எரிவாயுவில் இயக்கப்படும்.

18) 1,125 மின் பேருந்துகள் அறிமுகம் செய்யப்படும். 

19) விண்வெளித் தொழில்நுட்ப நிதி - ரூ.10 கோடி ஒதுக்கப்படும்.

20) ரூ.152 கோடியில் 10 புதிய அரசுத் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும்.

21) தமிழகத்தில் 25 இடங்களில் அன்புச்சோலை முதியோர் பராமரிப்பு மையம்.

22)  10 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக் கடன் உதவிக்கு ரூ.2.5 லட்சம் கோடி.

23) கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு.

24) ரூ.160 கோடியில் 2,000 பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.

 

25) ரூ.77 கோடியில் மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் உருவாக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து