எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மார்ச் 13) வெளியிட்டார்.
தலைமைச் செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ வெளியிட்டார். அப்போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய அரசு ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, இதுபோன்ற பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், தமிழக அரசு முதல்முறையாக இம்முறை 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவதற்கு முன்பாக, பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
முக்கிய அம்சங்கள் வருமாறு:-
1) 2021-22-ல் இருந்தே 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தமிழ்நாடு தொடர்ந்து எட்டி வருகிறது. 2025-25லும் 8 சதவீதம் அல்லது அதற்கு மேலான வளர்ச்சி விகிதத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2) தமிழ்நாடு 2023-24-ம் ஆண்டில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 9.21 சதவீதம் பங்களித்துள்ளது. 2023-24ல் மாநில உள்நாட்டு உற்பத்தியானது (ஜிஎஸ்டிபி) ரூ.27.22 லட்சம் கோடியை எட்டியுள்ளது. பெயரளவு வளர்ச்சி விகிதம் 13.71 சதவீதமாகவும், உண்மையான வளர்ச்சி விகிதம் 8.33 சதவீதமாகவும் உள்ளது.
3) தமிழகத்தின் தனிநபர் வருமான வளர்ச்சியானது தொடர்ந்து பல ஆண்டுகளாக தேசிய சராசரியைவிட அதிகமாகவே இருந்து வருகிறது. 2022-23ல் ரூ.2.78 லட்சமாக இருந்தது; இது தேசிய சராசரியான ரூ.1.69 லட்சத்தைக் காட்டிலும் 1.64 மடங்கு அதிகமானதாகும். இதன் காரணமாக தனிநபர் வருமானத்தில் தமிழகம் நான்காம் இடம் வகிக்கிறது. மாநிலத்தின் தனி நபர் வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் தேசிய சராசரியை விட மேலே உள்ளது.
4) 2023-24ல், சேவைத் துறையானது மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்புக்கூட்டலில் (ஜிஎஸ்விஏ) 53.63 சதவீதம் பங்களித்தது; அதற்கடுத்து இரண்டாம் நிலைத் துறை (33.37 சதவீதம் ), முதன்மைத்துறை (13 சதவீதம் ) பங்களித்துள்ளன. வளர்ந்த மாநிலங்களைப் போலவே மாநிலத்தின் இரண்டாம் நிலைத் துறையின் பங்கு 5 சதவீதம் அளவில் அதிகரித்தால், வேலைவாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும்.
5) தமிழ்நாட்டில் 2022-23-ல் 6 சதவீதம் என்றிருந்த சில்லறை வர்த்தகப் பணவீக்கம், 2023-24ல் 5.4 சதவீதமாகவும், 2024-25ல் (ஜனவரி 2025 வரையில்) 4.8 சதவீதமாகவும் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 2019-20ல் 6 சதவீதம் என்றிருந்த நகர்ப்புர பணவீக்கம் 2024-25-ல் (ஜனவரி 2025 வரையில்) 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.
6) மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவில் நெல், மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, தினை வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் 62 சதவீதமாகவும், எண்ணெய் வித்துகள், கரும்பு, பருத்தி போன்ற உணவு தானியமல்லாத பயிர்கள் 38 சதவீதமாகவும் உள்ளன. பயிர்ப்பரப்பில் நெல் தொடர்ந்து முதன்மை நிலை வகித்து வருகிறது. 2019-20ல் மொத்த பயிர்ப் பரப்பில் 32.1 சதவீதமாகவும் இருந்த நெல்லின் பங்கு 2023-24ல் 34.4 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது.
7) தமிழக விவசாயிகளுக்கு பட்டியலிடப்பட்ட வணி வங்கிகள் வாயிலாக வழங்கப்படும் கடன் 2019-20ல் ரூ.1.83 லட்சம் கோடியிலிருந்து, 2023-24ல் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
8) 2024-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.6.64 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 14.55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9) 2019-20 முதல் 2023-24 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு வர்த்தக வங்கிகள் அளித்துள்ள கடன் ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடு ரூ.5,909 கோடியிலிருந்து ரூ.20,157 கோடியாக அதிகரித்துள்ளது.
10) 2005-06 முதல் 2022-23 வரையான காலத்தில் தமிழ்நாட்டின் வறுமை நிலை (ஹெச்சிஆர்) 36.54 சதவீதத்தில் இருந்து வெறும் 1.43 சதவீதமாக வெகுவாக குறைந்துள்ளது.
11) சமூகத் துறைக்கான செலவினங்களை தமிழக அரசு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2019-20ல் ரூ.79,859 கோடியாக இந்த ஒதுக்கீடு, 2022-23 ஆம் ஆண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
14 Mar 2025மும்பை : இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக்கில் அரையிறுதியில் இந்திய அணி ஆஸியை வீழ்த்தியது.
இந்திய அணி வெற்றி...
-
அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி மறுப்பு: சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அறிவிப்பு
14 Mar 2025சென்னை, அமலாக்கத் துறை உள்நோக்கத்தோடு, ஆதாரங்கள் ஏதுமின்றிவெளியிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுப்பதாகவும் உரிய சட்டநடவடிக்கை எடுப்பேன் என்றும் அமைச்சர
-
5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: அமைச்சர் தங்கம் தென்னரசு
14 Mar 2025சென்னை, 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 10 புதிய கலை கல்லூரிகள்: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, தமிழகத்தின் 10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்,” என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள்
14 Mar 2025சென்னை ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம், ஒசூர், விருதுநகரில் புதிய டைடல் பூங்கா, மதுரை, கடலூரில் காலணி தொழிற்பூங்கா, 9 இடங்களில் புதிய சிட்கோ தொழிற்பேட
-
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ரூ.3,500 கோடியில் 1 லட்சம் புதிய வீடுகள் கட்ட முடிவு
14 Mar 2025சென்னை, “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 2025-26-ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டும் பணிகள் தொடங்கப்படும்,” என்று தம
-
உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய அதிபரின் நிபந்தனைகள்
14 Mar 2025மாஸ்கோ : 30 நாட்கள் போர் நிறுத்தம் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை நாங்கள் ஏற்கிறோம். ஆனால், அதற்கு முன்னர் சில பிரச்சினைகளைக் களைய வேண்டும்.
-
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சட்டசபையில் வரும் 17-ம் தேதி வாக்கெடுப்பு
14 Mar 2025சென்னை, அ.தி.மு.க. கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து (17-ம் தேதி) திங்கட்கிழமை விவாதிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
-
மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்து
14 Mar 2025மும்பை : மராட்டிய மாநிலத்தில் தண்டவாளத்தில் சிக்கிய லாரி மீது ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.
-
கருணாநிதி நினைவிடத்தில் தங்கம் தென்னரசு மரியாதை
14 Mar 2025சென்னை, 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு நேரில் சென்று
-
ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கியது: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்
14 Mar 2025சென்னை, சென்னையில் நேற்று தங்கம் விலை பவுன் ரூ.65,800-ஐ கடந்து மற்றுமொரு புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனையானது.
-
தமிழக பட்ஜெட்: அரசியல் கட்சியினர் கருத்து
14 Mar 20252025 - 26-ம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகளும் இது குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
-
வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ.1,243 கோடி வருவாய் ஈட்டிய இந்தியா
14 Mar 2025புதுடெல்லி : வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் ரூ. 1,243 கோடி வருவாய்யை இந்தியா ஈட்டியுள்ளது.
-
ஐ.பி.எல். டெல்லி அணியின் கேப்டனாக அக்சர் படேல் நியமனம்
14 Mar 2025புதுடெல்லி : ஐ.பி.எல். 18-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் அக்சர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.க. மாநில நிர்வாகிக்கு ஜாமீன்
14 Mar 2025மதுரை : சிறுமி பாலியல் வழக்கில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு தலைவர் ஷாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் முறைகேடு: அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
14 Mar 2025சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு என்ற அமலாக்கத்துறை குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்
-
பணிப்பெண்கள் மீது பயணி தாக்குதல்: அமெரிக்காவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
14 Mar 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் சவன்னா விமான நிலையத்தில் இருந்து புளோரிடாவுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது.
-
தமிழ்நாட்டின் தாயுமானவர் முதல்வர் : முதல்வருக்கு அன்பில் மகேஷ் பாராட்டு
14 Mar 2025சென்னை, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.
-
தமிழகத்தின் கடன் ரூ.9 லட்சம் கோடியாக மேலும் அதிகரிப்பு
14 Mar 2025சென்னை, கடந்த ஆண்டு ரூ.8 லட்சம் கோடியாக இருந்த கடன் தற்போது மேலும் 1 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
-
தமிழக பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:
14 Mar 20251) 6,100 கி.மீ. நீளமுள்ள கிராம சாலைகள் ரூ.2,100 கோடியில் மேம்படுத்தப்படும்.
-
வங்கதேச கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அறிவிப்பு
14 Mar 2025டாக்கா : 2025 ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரர்களின் மத்திய ஒப்பந்தங்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
-
சென்னை, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைகள்: அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, சென்னை, கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் சேவைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நட
-
ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்: நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
14 Mar 2025சென்னை, 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் பங்கு கு
-
காலை உணவுத் திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு: பட்ஜெட்டில் அறிவிப்பு
14 Mar 2025சென்னை, முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்கு ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-03-2025.
14 Mar 2025