முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீன்பிடித் தடைக் காலத்தில் ரூ.8,000 மானியம்: அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
Fisher-Boat

சென்னை, மீன்பிடித் தடைக் காலத்தில் மீனவர்களுக்கு ரூ.8,000 மானியம் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.;

2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் உரையின் போது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

மீனவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் கன்னியாகுமரி, நாகப்பட்டினம். தூத்துக்குடி திருநெல்வேலி. ராமநாதபுரம், கடலூர் திருவாரூர். புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர். விழுப்புரம், திருவள்ளூர். செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மீன் இறங்கு தளம், மீன்பிடி வலை பின்னுதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் செயல்படுத்தப்படும்.

இலங்கை கடற்படையினரால் அதிகளவிலான தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும். இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கவும். தமிழ்நாடு முதல்வர்  மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் நலன் கருதி. இலங்கையில் நெடுங்காலமாக மீட்க இயலாத நிலையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகளுக்கு நிவாரணத் தொகையை 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும். இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கான நிவாரணத் தொகையை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை சிறையில் வாடும் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 350 ரூபாய் தின உதவித்தொகை 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் மீன் பிடிப்பு குறைவு மானியம் 1,79.147 மீனவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதமும். மீன்பிடிப்புக் குறைவு காலத்திற்கென சேமித்து வைப்பதை ஊக்குவிக்க 2,10,850 மீனவர் மற்றும் 2,03.290 மீனவ மகளிருக்குத் தலா 3,000 ரூபாய் வீதமும், மீன்பிடி தடைக் காலத்தில். 198.923 மீனவர்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு 1,500 ரூபாயுடன் மாநில அரசின் கூடுதல் பங்களிப்பாக 6,500 ரூபாயும் சேர்த்து தலா 8,000 ரூபாய் வீதமும் என. மொத்தம் 381 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், டீசல்  மற்றும் மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கிட இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 286 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து