முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புராதனக் கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, புராதனக் கட்டிடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-26ம் ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்:-

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, பழுதடைந்த நிலையில் உள்ள 6,424 குடியிருப்புகள் 1148 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து. அடுத்த இரு ஆண்டுகளில். 5,256 குடியிருப்புகள் 1051 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்யப்படும். குறைந்த வருமானம் கொண்ட வகையினருக்கான வீட்டுவசதித் தேவையை நிறைவு செய்திடவும்.

தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு புதிய குடியிருப்புகளை ஏற்படுத்திடவும் உதவிடும் வகையில் தொகுப்பு நிதியம் ஒன்று உருவாக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 7,718 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புராதனக் கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் நோக்கோடு, சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள கீழைக் கலையியல் ஆய்வு நிறுவன புராதனக் கட்டடம், இராணிப்பேட்டையில் உள்ள தேசிங்கு ராஜா ராணி நினைவகம், கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம்,

திருச்சியில் இராணி மங்கம்மாள் கோட்டை வளாக அலுவலகங்கள், தூத்துக்குடி மாவட்டம். எட்டையபுரம் நகரில் 131 உள்ள மகாகவி பாரதியார் இல்லம் உள்ளிட்ட 17 புராதனக் கட்டடங்கள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பொதுப் பணித்துறைக்கு 2,457 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து