முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக ரோகித் தொடர்வார்: பி.சி.சி.ஐ

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து,  டெஸ்ட் அணியின் கேப்டன்சி குறித்து பி.சி.சி.ஐ. முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரே இந்திய அணியின் கேப்டனாக தொடரவுள்ளதாக பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராபி... 

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற ரோகித் சர்மா, கங்குலி, தோனிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய கேப்டனாக சாதனை படைத்தார். அத்துடன் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐ.சி.சி. கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற தோனியின் மகத்தான சாதனையை அவர் சமன் செய்தார்.

ஒயிட்வாஷ்...

முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி, 10 ஆண்டுக்கு பிறகு 'பார்டர் - கவாஸ்கர்' கோப்பையை பறிகொடுத்தது. மேலும் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இந்தியா ஒயிட்வாஷ் ஆனது. அதனால் தொடர்ந்து 3-வது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா இழந்தது.

புதிய கேப்டன்...

இந்த தோல்விகளுக்கு இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். பேட்ஸ்மேனாக மட்டுமன்றி கேப்டன்ஷிப்பிலும் சொதப்பியது காரணமாக அமைந்தது. இதன் காரணமாக பெரும் விமர்சனத்தை சந்தித்த ரோகித் சர்மா மீண்டும் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகின. இதனால் டெஸ்ட் போட்டிகளில் அவரின் கெரியர் முடிவுக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்ததாகவும் கூறப்பட்டது.

பி.சி.சி.ஐ. முடிவு... 

இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி, "சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை கேப்டனாக வென்றுள்ள ரோகித் சர்மாவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடர்வார் என்று பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த தொடருக்கு பின்னர் அவர் மற்றும் அணியின் செயல்பாட்டை பொறுத்து கேப்டன்சி மாற்றத்தை பார்க்கலாம் என்றும் பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து