முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உகாண்டா கலவரத்தில் 65 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

கம்பாலா, ஜூலை 8 - ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் காங்கோ நாட்டின் மேற்கு பகுதி எல்லையில் வென்கோரி மலைப்பகுதி உள்ளது. இங்கு காச்சேரி மற்றும் பன்டிபுக்யோ டொரோகோ மாவட்டங்கள் உள்ளன. இங்கு வாழும் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இடையே மோதல் நிலவுகிறது. சமீப காலமாக இது இனக்கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டு சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் மீண்டும் இனக்கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். போலீஸ் நிலையம் மற்றும் ராணுவ குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே கலவரத்தை அடக்க அங்கு போலீசாருடன் ராணுவமும் ஈடுபட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் 65 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளும் அடங்குவர். தற்போது அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்