முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேபிள் டென்னிசில் தமிழக ஜோடிக்கு வெள்ளி

சனிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கிளாஸ்கோ, ஆக.03 - 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று முன் தினம் இந்தியாவுக்கு மேலும் 4 பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த அச்சந்தா சரத்கமல்-அமல்ராஜ் ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. சிங்கப்பூரைச் சேர்ந்த ஜிசாங்-ஜியான் ஜோடியை 3-0 என்ற கணக்கில் சரத்கமல்- அமல்ராஜ் ஜோடி வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் இந்த ஜோடி சிங்கப்பூரைச் சேர்ந்த சாவ்-லீயை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த இந்த போட்டியில் சரத்கமல்-அமல்ராஜ் ஜோடி தோற்றது. 11-8, 7-11, 5-11 என்ற கணக்கில் தமிழக ஜோடி தோற்று தங்கப்பதக்கத்தை இழந்தது. இருப்பினும் இந்த ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சரத்கமல் அரை இறுதிக்கு நுழைந்துள்ளார்.

பெண்களுக்கான வட்டு எறியும் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்திய வீராங்கனை சீமாபுனியா 61.61 மீட்டர் தூரம் எறிந்து 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார். தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 2-வது பதக்கம் இதுவாகும். ஆண்களுக்கான வட்டு ஏறிதலில் இந்திய வீரர் விகாஸ் கவுடா தங்கப்பதக்கம் வென்று முத்திரை பதித்து இருந்தார்.

வட்டு எறியும் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியா வீராங்கனை கிருஷ்ணா புனியாவால் 5-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர் 57.84 மீட்டர் தூரம் வீசினார். இதில் ஆஸ்திரேலிய வீராங்கனை டேனிசாமுவேல்ஸ் தங்கப்பதக்கமும், இங்கிலாந்து வீராங்கனை லல்லி வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்