முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா நிதி நிறுவன ஊழல்: திரிணாமூல் எம்.பி.யிடம் விசாரணை

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

கொல்கத்தா, செப்.26 - சாராதா நிதி நிறுவன ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுபேந்து அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேர விசா ரணைக்குப் பிறகு வெளியில் வந்த சுபேந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்திய தண்டனைச் சட்டம் 160-ன் கீழ் சாட்சியம் அளிப்பதற்காக என்னை அழைத்திருந்தனர்" என்றார். இதே கட்சியைச் சேர்ந்த சஞ்சய் போஸிடமும் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளது. இதன் மூலம் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளனர்.

இதுதவிர திரிணமூல் கட்சியி லிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டுள்ள குணால் கோஷ் சாரதா சீட்டு நிறுவன ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்