முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மறைவிற்கு இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சூரியமூர்த்தி மறைவுக்கு அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுசெயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு:
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு, ஒன்றிய கழக செயலாளரும் ஊராட்சி ஒன்றிய கழக செயலாளரும் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவருமான அன்பு சகோதரர் வீ. சூரிய மூர்த்தி மாரடைப்பால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன். கழகத்தின் மீதும் கழகத்தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பக்கால கழக உடன்பிறப்பு சூரியமூர்த்தியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவி்த்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அவர் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து