முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

1 லட்சம் குழந்தைகளுக்கு புத்தாடை: சீஷா

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 1 லட்சம் ஏழை குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட உதவிகள் வழங்கப்பட்டன.
சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில் அமைந்துள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் நலத்திட உதவிகளை சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், காருண்யா பல்கலைகழகத்தின் வேந்தருமான பால் தினகரன் பேசுகையில், சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு நலதிட்டங்களை ஏழை எளியவர்களுக்கு வழங்கி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு 1 லட்சம் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளோம்.இதேபோன்று மாற்றுதிறனாளிகளுக்கு ஸ்கூட்டர், இலவச தையல் இயந்திரம் ஆகியவையும் வழங்கியுள்ளோம். மேலும் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் இலவச தையல் பயிற்சி, மாற்றுதிறனாளி மாணவர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். என்றார்.
இந்த விழாவில் சீஷாவின் முதன்மை இயக்குநர் டாக்டர் ஜெயக்குமார் டேனியல் உட்பட ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து