முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா எதிர்ப்பால் பீர் பாட்டிலில் இருந்து காந்தி படம் நீக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

வாஷிங்டன் - அமெரிக்காவின் கனெக்டி கட்டில் நியூ இங்கிலாந்து மது தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் மகாத்மாகாந்தி படத்துடன் கூடிய பீர்பாட்டிலை அறிமுகப்படுத்தி விற்பனை செய்தது.

அதற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், கண்டனமும் கிளம்பியது. இங்கிலாந்திடம் அகிம்சை வழியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்தியை இழிவு படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் பீர்பாட்டிலில் இருந்து காந்தி படத்தையும், மதுவின் பெயரையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
 
வலியுறுத்தப்பட்ட அதைத் தொடர்ந்து பீர் பாட்டிலில் இருந்து காந்தி பெயர் மற்றும் படத்தை அந்த நிறுவனம் நீக்குகிறது. அமெரிக்க வாழ் இந்திய வர்த்தகர்கள் மற்றும் பிரதிநிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு நீக்குவதற்கான முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் அந்நிறுவனம் மன்னிப்பு கேட்து குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து