முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே சார்ந்த நிறுவனங்கள் பங்கு விலை அதிகரிப்பு

வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2015      வர்த்தகம்
Image Unavailable

மும்பை - நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டை நேற்று மதியம் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து ரயில்வே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக உயரத் தொடங்கின.

நாடாளுமன்றத்தில் நேற்று ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மும்பை பங்கு வர்த்தகத்தில், ரயில்வே துறை சார்ந்த நிறுவனங்களான ஜீகாம் எலெக்டரானிக் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுகூனத்தின் பங்குகள் 4.9 சதவிகிதத்துக்கு அதிகரித்தன. பூஷண் ஸ்டீல் கன்டெய்னர் நிறுவனத்தின் பங்கு 23.1 சதவிகிதம் உயர்ந்தது.
டிட்கார் வேகன்ஸ் நிறுவனம் 6.9 சதவிகித உயர்வுடன் விலை போனது. டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.6 சதவிகித விலை உயர்வுடன் காணப்பட்டன.

ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் நிறுவன பங்குகள் 2.55 சதவிகித உயர்வுடனும், ஜேஎஸ்ட பிள்யூ நிறுகூனத்தின் பங்குகள் 9.4 சதவிகித உயர்வுடன் காணப்பட்டது. இன்றைய பங்கு வர்த்தகத்தில் ரயில்வே தொடர்பான பங்குகள், ஏர்டெல், டாடா மோட்டார்ஸ், டிஎல்எப், ஓசிஎல், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சில்லறை முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரயில்வே பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து, மும்பையில் நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தக விற்பனையில் எச்டிஎப்சி வங்கி, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, என்டிபிசி மற்றும் கெய்ல் நிறுவன பங்குகளில் லாபம் கிடைத்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து