முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதிஷ் குமார்-லல்லு பிரசாத் வீழ்ச்சிக்கான கவுன்ட் டவுன் துவங்கி விட்டது : பாஜக அமைச்சர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 10 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

பெங்களூரு, பீகார் மேலவைதேர்தலின்முடிவுகள் நேற்று வெளியாகின.இதில் பாஜக கட்சி அமோக வெற்றி பெற்றது .இந்த வெற்றி குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் ஆனந்த் குமார் கூறுகையில்,தற்போதைய தேர்தல் முடிவுகள் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்.ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரின் வீழ்ச்சிக்கான கவுன்ட் டவுன் ஆகும் என தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஆனந்த் குமார் நேற்று பெங்களூரில் கூறியதாவது,பீகாரில் மேலவை தேர்தல் முடிவுகள் இன்று(நேற்று) வெளியாகி இருக்கின்றன.இந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று இருக்கிறது.இன்றைய தேர்தல் முடிவுகள் யார் பக்கம் காற்று வீசுகிறது என்பதை காட்டுவதாக உள்ளது.பீகாரில் பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கே அமோக வெற்றி கிடைத்து இருக்கிறது.பாஜக சார்பில் 5பேர் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.இந்த வெற்றி எண்ணிக் கையை தொடர்ந்து பீகார் மேலவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக் கை 30ஆக அதிகரித்து இருக்கிறது.இந்த ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளும் பீகார் மக்கள் பாஜக கூட்டணியின் பக்கமே இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள 42ஆயிரம் கிராம மக்களும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை ஆதரித்தே வாக்களித்து இருக்கிறார்கள்.தற்போதைய பீகார் அரசியல் சூழல் பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி(என்.டி.ஏ) பக்கமே இருப்பதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து