முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க தயார் :ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் லா விருப்பம்

வெள்ளிக்கிழமை, 31 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை - இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளிக்க தயார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் லா விருப்பம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்குடங்கள் பிளட்சர் 2011ம் ஆண்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். கிர்ஸ்டன் விலகலுக்கு பிறகு அவர் பயிற்சியாளர் ஆனார். ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை போட்டியோடு பிளட்சரின் பதவி காலம் முடிந்தது. அவர் 4 ஆண்டுகள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். பிளட்சருக்கு பதிலாக புதிய பயிற்சியாளர் இன்னும் நியமிக்கப்படவில்லை. வங்காளதேச தொடர் மற்றும் ஜிம்பாப்வே தொடரில் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமலே விளையாடியது.

இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரியின் மேற்பார்வையில் அணி விளையாடி வருகிறது. இந்திய அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரிலும் பயிற்சியாளர் நியமனம் செய்யப்படவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரின்போது இந்திய அணிக்கு  புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருந்தது.  இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஸ்டுவர்ட் லா விருப்பம் தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான அவர் அந்நாட்டு ஏ அணிக்கு உதவி பயிற்சியாளராக உள்ளார். இது குறித்து ஸ்டுவர்ட் லா கூறியதாவது: இந்திய அணியில் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புகிறேன். இந்திய துணை கண்டத்தின் ஆடுகள தன்மையை பற்றி நான் நன்கு அறிந்தவன். எனவே யாராவது என்னை தொடர்பு கொண்டு இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டால் மகிழ்ச்சி யுடன் ஏற்றுக்கொள்வேன். இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

46 வயதான ஸ்டுவர்ட் லா 1994-99ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணியின் விளையாடி இருக்கிறார். 2011 உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்தார். 2012ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் வங்காளதேச பயிற்சியாளராக பணியாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து