எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் மணி மண்டபம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டபேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார் . முதல்வரின் இந்த அறிவிப்பை சட்டபேரவை உறுப்பினர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டபேரவை விதிஎண் 110 கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது.
தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும், தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும், உரிமைக்காகவும் தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்த தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்துவதிலும், அவர்களது பெருமைகளை வருங்கால சந்ததியினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்கள் எழுப்பி மரியாதை செய்வதிலும் எனது தலைமையிலான அரசு இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்குகிறது.
அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தியாகி சங்கரலிங்கனார், வீரபாண்டிய கட்டபொம்மன், பொறியியல் அற்புதமான கல்லணையைக் கட்டிய கரிகால் சோழன், தென் தமிழகத்தின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் ஆகியோருக்கு மணி மண்டபங்களும் தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார், வீரத்தாய் குயிலி ஆகியோருக்கு நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டு என்னால் திறந்து வைக்கப்பட்டன.
மேலும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், சுயமரியாதைச் சுடரொளி ஜீவரத்தினம், மனு நீதிச் சோழன், சுவாமி சகஜானந்தா, ஹைதர் அலி - திப்பு சுல்தான் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கவும், தியாகி சிதம்பரநாதன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள் எழுப்பவும் என்னால் ஆணையிடப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.
நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவரும், இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக தந்தை பெரியாரால் சிவாஜி கணேசன் என்று அன்புடன் அழைக்கப்பட்டவரும், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவரும், ‚நடிகர் திலகம் என்று மக்களால் போற்றப்பட்டவரும், ‘கலைமாமணி’, ‘பத்ம ஸ்ரீ’, ‘பத்மபூஷன்’, ‘செவாலியே’, ‘தாதா சாகேப் பால்கே விருது’ ஆகிய விருதுகளுக்கு சொந்தக்காரரும், ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் பாத்திரங்களை ஏற்று அற்புதமாக நடித்து, அவர்களின் பங்களிப்பினை திரைப்படங்கள் மூலம், பட்டிதொட்டி எங்கும் எடுத்துச் சென்றவருமான மறைந்த சிவாஜி கணேசனின் கலைச் சேவையை பாராட்டிடும் வகையிலும், அவரது நினைவைப் போற்றிடும் வகையிலும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, நடிகர் சங்கம் சார்பாக நினைவகம் அமைக்கும் வகையில், சென்னை மாவட்டம், அடையாறு பகுதி சத்யா ஸ்டுடியோவிற்கு எதிரே உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று நான் உத்தரவிட்டேன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில்.சிவாஜி கணேசனுக்கு நினைவகம் அமைக்க இடம் ஒதுக்கித் தரும்படி, கேட்டுக் கொண்டதன் பேரில் நான் இந்த உத்தரவை வழங்கினேன். அதன் பேரில் மைலாப்பூர் வட்டாட்சியர் அவர்களால் இந்த இடம் தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடத்தின் ஊடே நீதியரசர்கள் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலை அமைந்திருந்ததால், நீதியரசர்கள் குடியிருப்புக்குச் செல்ல தனியே சாலை அமைப்பதன் செலவான 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை தென்னிந்திய நடிகர் சங்கம் அளித்திட வேண்டுமென அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களால் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்க இயலும் என தெரிவித்து அதனை 26.7.2004 அன்று வழங்கினர். எனவே, புதிய அணுகு சாலையை அமைப்பதற்கான மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை எனது தலைமையிலான தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. சிவாஜி கணேசன் மணிமண்டபம் அமைப்பதற்கு வழங்கப்பட்டநிலத்தை சுற்றி சுற்றுச் சுவர் ஒன்றை 13.2.2006 அன்று எனது தலைமையிலான அரசே அமைத்தது. தென்னிந்திய நடிகர் சங்கம்,.சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் எனது தலைமையிலான அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.
சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் நான் அப்போதே வழங்கியிருப்பேன்.சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக எனதுஅரசால் வழங்கப்பட்ட இடத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தால் இதுவரை நினைவகம் அமைக்கப்படவில்லை. அந்த இடத்தில் தமிழக அரசே.சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, சிவாஜி கணேசனின் நினைவைப் போற்றும் வகையில்,மணிமண்டபம் அமைக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடத்தில் மறைந்த நடிகர் திலகம் . சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை சட்டபேரவையில் உறுப்பினர்கள் பலத்த கரகோஷங்களுடன் வரவேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 4 hours ago |
ஸ்வீட் பால்.5 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
02 May 2024சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி உமா ரமணன், 69 உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிலவின் பள்ளங்களில் உறைந்த பனிக்கட்டிகள் : இஸ்ரோவின் ஆய்வில் கண்டுபிடிப்பு
02 May 2024சென்னை : நிலவின் பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் உறைந்த நிலையில் இருப்பது இஸ்ரோவின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.