எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: இலங்கை கடற்படை பிடித்துச் சென்ற 28 தமிழக மீனவர்கள் மற்றும் 30 படகுகளை மீட்க உடனடிநடவடிக் கை எடுங்கள் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதையும் தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிப்பதை தடுக்கப்படுவதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரத்தில் இருந்து கடந்த 26-9-15அன்று 7 மீனவர்கள் ஒரு எந்திர படகில் மீன் பிடிக்கச் சென்றனர். 29-9-15 அன்று அவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து சென்று விட்டனர்.
தற்போது அந்த 7தமிழக மீனவர்களும் இலங்கையில் நெசாம்போ பகுதியில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடித்துச் செல்லப்படுவது இது 3வது சம்பவமாகும். தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையான இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டது என்றாலும்இலங்கைஅரசின் செயல்பாடுகளால் கடல் பகுதியில் தொடர்ந்து அதே சூழலே நீடிக்கிறது.
எனவே மத்திய அரசு ,தூதரகம் மூலம் உறுதியான நடவடிக் கை எடுத்து தமிழக மீனவர்களின் நலனையும் உரிமையையும் காக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். பல தடவை இதுபற்றி கூறியுள்ள போதிலும் இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை சிறை பிடித்துச்செல்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக மீனவர்களை விடுவிக்கும் இலங்கை அரசு அவர்களது படகுகளை திருப்பி ஒப்படைப்பது இல்லை. இலங்கையின் இந்த திட்டத்தால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
தற்போது இலங்கை வசம் தமிழக மீனவர்களின் 30 மீன் பிடி படகுகள் உள்ளன. பருவமழை காரணமாக அந்த படகுகள் பழுதடைந்து சேதமாகும் நிலையில் உள்ளன. இலங்கை அரசுடன் 1974மற்றும் 1976ம்ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி உள்ளசர்வதேச கடல் எல்லையை இந்தியா ஏற்கக்கூடாது.இதை வலியுறுத்தி நான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தமிழக அரசும் தன்னை அதில் இணைத்துக் கொண்டுள்ளது.
எனவே தாங்கள் இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன் பிடி பகுதியில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் மீன் பிடித்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழக மீனவர்கள் வழக்கமாக மீன் பிடிக்கும் மன்னார் வளை குடா பகுதியில் சுதந்திரமாக எவ்வித பயமும் இன்றி மீன் பிடிக்க அனுமதிக்கப்படவேண்டும். இதுதொடர்பாக அனைத்து ராஜாங்க வழிகளையும் பயன் படுத்தி பிரச்சினைக்கு தீர்வ காண முயல வேண்டும். நேற்று(புதன் ) கைது செய்யப்பட்ட 7மீனவர்களையும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 21மீனவர்களையும் இலங்கை வசம் உள்ள 30 படகுகளையும் மீட்க உடனடியாக நடவடிக் கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 10 hours ago |
ஸ்வீட் பால்.6 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல