முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டி: விராட்கோலிக்கு சுனில் கவாஸ்கர் பாராட்டு

சனிக்கிழமை, 30 ஜனவரி 2016      விளையாட்டு
Image Unavailable

சிட்னி - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ள நிலையில், இந்திய இளம் வீரர் விராட்கோலியின் சிறப்பான ஆட்டத்திற்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தபோதிலும், டி-20 போட்டித் தொடரை வென்றுள்ளது. நேற்று முன்தினம் மெல்பர்னில் நடைபெற்ற 2-வது டி-20 போட்டியில், இந்தியா அபாரமாக ஆடி 27 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, 47 பந்துகளில் 60 ரன் குவித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 32 பந்துகளில் 42 ரன் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய விராட்கோலி 33 பந்துகளில் அதிரடியாக விளையாடி 59 ரன் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர், ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. முதலாவது டி-20 போட்டியில் விராட்கோலி 55 பந்துகளில் 90 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்த போட்டிகளில் விராட்கோலியின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா டி-20 தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், விராட்கோலியின் ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சம் இல்லாவிட்டாலும் கூட விராட்கோலி அனைத்து பந்துகளையும் அடித்து ஆடி, ரன்குவிப்பார் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். எதிர்கால இளம் தலைமுறை வீரர்களுக்கு விராட்கோலி மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்குவார் என்றும் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்