முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆங்கில புத்தாண்டையட்டி தி.மலை கோவில், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை:ஆங்கில புத்தாண்டையட்டி திருவண்ணாமலையில் கோவில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 3.30 மணியளவில் நடை திறக்கப்பட்டு கோபூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் மார்கழி மாதம் மற்றும் புத்தாண்டு என்பதால் அதிகாலையிலிருந்தே உள்ளூர், வெளியூர், வெளிமாநிலம் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் நீண்டவரிசையில் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் கோவில் வளாகத்திலுள்ள நவகிரகங்களுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு கோவில் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டன. இதேபோல் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை திண்டிவனம் சாலையிலுள்ள உலக மாதா தேவாலத்தில் கிறிஸ்துவர்கள் புத்தாடை அணிந்து வான வேடிக்கையுடன் நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததையட்டி பங்கு தந்தை ஞானஜோதி தலைமையில் ஆங்கில புத்தாண்டு 2017 சிறப்பாக அமையவும், நாடு நலம்பெறவும், அனைத்து சமுதாய மக்களும் இன்புற்று வாழவும், அமைதியான முறையில் திருப்பலி பாடல்களை பாடி மனமகிழ்ந்து ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்தி, அன்பை பறிமாகிக்கொண்டனர். நகரின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் புத்தாண்டு பிறந்ததையட்டி கேக் வெட்டியும் பட்டாசு வெடித்தும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக் கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்