எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியே தீர வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் சிலிர்த்தெழுந்து நடத்திய கட்டுக்கோப்பான போராட்டத்துக்கு மத்திய - மாநில அரசுகள் பணிந்துள்ளன. மாணவர்கள் போராட்டம் மக்கள் போராட்டமாக நேற்று வெடித்ததால் மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து அவசரச் சட்டம் கொண்டு வருவதை உறுதி செய்தன.ஜல்லிக்கட்டு போட்டியை இடையூறு இல்லாமல் நடத்துவதற்கு தேவையான அம்சங்களை கொண்ட சட்ட முன் வரைவை தமிழக அரசின் 5 உயர் அதிகாரிகள் மேற்கொண்டனர். முதலில் அந்த அவசர சட்ட முன் வடிவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கொடுக்கப்பட்டது. அதைப் படித்து பார்த்து ராஜ்நாத்சிங் கையொப்பமிட்டு ஒப்புதல் வழங்கினார்.இதையடுத்து அந்த சட்ட முன் வடிவு சட்ட அமைச்சகத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த 2 அமைச்சகங்களும் தமிழக அரசின் சட்ட முன் வடிவை அப்படியே ஏற்றுக்கொண்டு அளித்தன. மத்திய அரசின் மூத்த வக்கீல் அட்டர்னி ஜெனரல் முகுல்ரோத்கியும் தமிழக அரசின் சட்ட முன் வடிவை முழுமையாக படித்துப் பார்த்து தனது பரிந்துரைகளை தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவைகளின் ஒப்புதலைத் தொடர்ந்து அந்த அவசரச் சட்ட முன் வடிவு ஜனாதி பதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும் என்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இது மாநில விவகாரம் தொடர்பான அவசரச் சட்டம் என்பதால் ஜனாதிபதி ஒப்புதல் பெறத் தேவை இல்லை என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.ஜனாதிபதியின் பார்வைக்கு அந்த அவசரச் சட்டத்தின் நகலை மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என்றும் கூறப்பட்டது. மேலும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு மத்திய உள்துறையிடம் முறைப்படி ஒப்புதல் பெறப்பட்டது.
நேற்றிரவே அந்த அவசரச் சட்டத்துக்கான கோப்பு தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. இனி அந்த கோப்பில் கவர்னர் கையொப்பமிட வேண்டும். தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 4 மணிக்கு சென்னை வர உள்ளார்.
அதன் பிறகு அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துவார். இதையடுத்து அவர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் கையொப்பமிடுவார். கவர்னர் அலுவலக நடைமுறைகள் முடிவடைவதற்கு சுமார் 2 மணி நேரங்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இன்று மாலை 6 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவசரச் சட்டத்தில் கையொப்பமிட்டால் தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். அதன் பிறகு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்க வகை செய்யும் அறிவிக்கையை தமிழக அரசு அதிகாரப் பூர்வமாக முறைப்படி வெளியிடும்.அந்த அறிவிக்கை வெளியிடப்பட்டதும் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்து விடும். எனவே மாணவர்களும், இளைஞர்களும் எதிர்பார்த்த அவசரச் சட்டம் இன்றே நடைமுறைக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக அரசின் அவசரச் சட்டம் காரணமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. நாளையே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .