முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம் - ரிசர்வ் வங்கி

புதன்கிழமை, 8 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : வரும் 20-ம் தேதி முதல் வாரத்திற்கு சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 13-ம் தேதி முதல் எந்த நிபந்தனையும் இன்றி பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள்

கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இதற்கு பதிலாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் தேவைக்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காததால் வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிரதமரின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் தலைவர்களும், இதர எதிர்கட்சி தலைவர்களும் கடுமையாக கண்டித்தனர். ஆனால் பிரதமரோ, கருப்பு பணத்தையும் கள்ளநோட்டையும் ஒழிக்க இதுவே சிறந்த வழி என்று கூறினார். இவரது இந்த நடவடிக்கையை சில உலக நாடுகளும் கூட பாராட்டின.

வாரத்துக்கு ரூ.24 ஆயிரம்...

இறுதியாக இருந்த நிலவரப்படி ஏ.டி.எம்.களில் ஒரு அட்டைக்கு ஒரு நாளைக்கு ரூ.4,500 மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். இதனால் பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஏ.டி.எம்.களும் முழுமையாக இயங்கவில்லை, பெரும்பாலான ஏ.டி.எம்.கள் பூட்டியே இருந்தன. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுள்ளது. தற்போது பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வாரத்திற்கு ரூ.50 ஆயிரம்

அதாவது பிப்ரவரி 20-ம் தேதி முதல் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்திற்கு ரூ.50 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், மார்ச் 13 ஆம் தேதி முதல் சேமிப்புக்கணக்கில் கட்டுப்பாடு இன்றி பணம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த தீர்வாக அமையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்