முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி  சென்னையில் கருத்தரங்கம் 

ஞாயிற்றுக்கிழமை, 5 மார்ச் 2017      சென்னை

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு மோகன் பவுண்டேஷன் நடத்தும், மதம் மற்றும் தத்துவம் அடிப்படையிலான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி சென்னையில் தொடங்கிய கருத்தரங்கம் இன்று நிறைவடைகிறது. இதில் சிறப்பு விருந்தினர் சயீத் அலி காஜி அஸ்கர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இயலாத காரணத்தால் அவரது உரை இந்நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது "மனிதர்கள் இயல்பு என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து, ஒரு சமூகமாக வாழ்வதே ஆகும். நாம் எப்போதும் தனித்து வாழ்வதை தவிர்த்துவிட்டு பிறரோடு ஒன்று கூடி பேசி பழகி, இணைந்து உறவாடியே வாழ்கிறோம். ஆனால் ஒரு சிலர் சில நேரங்களில் மனித இயல்புக்கு முரணாக பிறரிடமிருந்து வேறுபட்டு சுயவிருப்பத்திற்காக செயல்படும் போது பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதனை தொடர்ந்து அகங்காரம், சுயநலம், பொறாமை, பேராசை போன்ற குணங்கள் மேலோங்கி போர்களும் வன்கொடுமைகளும் நிகழ்கின்றன." என்று தெரிவித்துள்ளார்.

இன்று மாலை நடைபெறும் நிறைவு விழா நிகழ்ச்சியில், ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதரக அதிகாரி நூரியன்; ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வஜாஹத் ஹபிபுல்லாஹ்; தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் . சுதிர் லோதா ஆகியோர் உரையாற்றுகின்றனர். .

மேலும், மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தி.நகர், கிரி சாலை, புதிய எண். 7 என்ற முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான அத்வைத பீடத்தில் நாள் முழுவதும் சொற்பொழிவுகளும், விவாதங்களும் நடைபெறுகின்றன.பரதம் – ஒடிசி நாட்டிய நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் மார்ச் 5-ம் தேதியன்றும், குச்சுப்புடி நடனம் மயிலாப்பூரில் 6-ம் தேதியன்றும் நடைபெறும். இசை மற்றும் நடனம் வாயிலாக ஓர் அமைதியான சூழ்நிலை கிடைக்கும் வகையில் இந்நிகழ்ச்சிகள் அமையும்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்