முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் 2-ம் கட்ட தேர்தலில் 80 சதவீத ஓட்டுப்பதிவு

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, அக்.20 - தமிழகத்தில் நேற்று நடைப்பெற்ற 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நேர்மையாகவும் நடந்து முடிந்தது என்றும் எந்தவித அசாம்பாவிதங்களும் நடைபெறவில்லை என்றும் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறியுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு: 

கடந்த 17-ந் தேதி நடைப்பெற்ற முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 77 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று (புதன்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது வாக்குபதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. கிராமப்புறங்களில் காலை 7 மணியில் இருந்தே ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக இருந்தது. 38 ஆயிரத்து 20 ஓட்டுச் சாவடிகளில் நடந்த இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்காக பாதுகாப்பு உள்பட எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப் பதிவை வீடியோவில் பதிவு செய்தனர். 

கிராமப்புறங்களில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுக்கள் போட்டதால் மற்ற வாக்காளர்கள் காத்திருக்க நேரிட்டது. nullத்​சிலிப்புகள் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டதால் தேவை இல்லாத தாமதம் தவிர்க்கப்பட்டது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். மொத்தம் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான மொத்த வாக்காளர் எண்ணிக்கை ஒரு கோடியே 92 லட்சத்து 67 ஆயிரத்து 501 பேராகும். சென்னை மாநகராட்சி பகுதிகளில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்த நிலையில் புறநகர் பகுதிகளில் 2​வது கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. பல்லாவரம், தாம்பரம், அனகாபுத்தூர், பம்மல் நகரசபை பகுதிகளில் விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. அது போல திருnullநீர்மலை, பெருங்களத்தூர், பீர்க்கங்கரணை, செம்பாக்கம், மாடம்பாக்கம், சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதிகளிலும் காலை முதலே விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது. தென்சென்னை புறநகர் பகுதிகளான முடிச்சூர், கவுல் பஜார், பொழிச்சலூர், திரிசூலம், மூவரசம்பேட்டை, மதுர பாக்கம், மேடவாக்கம், வேங்கை வாசல், திருவன்சேரி, அகரம், பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம் பாக்கம், சிதலபாக்கம், ஒட்டியம்பாக்கம் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து தேர்தல் விறு விறுப்பாக நடைப்பெற்றது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி திருத்தணி ஆவடி, திருவேற்காடு ஆகிய 4 நகராட்சிகளிலும், நாரவாரிகுப்பம் திருமழீசை திருநின்றவூர் ஆகிய 3 பேரூராட்சிகளிலும், பூந்தமல்லி, கடம்பத்தூர், திருத்தணி, புழல், ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் 160 ஊராட்சிகளுக்கும் தேர்தல் நடைப்பெற்றது. 

இதே போல் தமிழ்நாடு முழுவதும் முக்கிய நகரங்கள் தவிர நகர சபையில் இருந்து கிராமம் வரை ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக இருந்தது. ஓட்டுப் பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு ஓட்டுஎண்ணும் இடங்களுக்குகொண்டு சென்று பலத்த பாதுகாப்புடன் வைக்கப்படும். முதல்கட்ட தேர்தல் நடந்த போது முறைகேடுகள் ஏற்பட்டதாக புகார்கள் கூறப்பட்ட 7 இடங்களில் இன்று (அக். 20)மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், நாளை மறு தேர்தல் நடத்தப்படும். 

மறு தேர்தல் நடத்தப்படும் இடங்களில் பதிவான ஓட்டுக்களும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்புடன் வைக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 1072 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த 1072 இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4 அடுக்கு பாதுகாப்புடன் ஓட்டு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) காலை 1072 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடைபெறும். சென்னையில் 200 வார்டுகளின் ஓட்டுக்கள் 18 இடங்களில் எண்ணப்பட உள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடக்கும் தினத்தன்று கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் கூறும்போது தமிழகம் முழுவதும் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் அமைதியாகவும் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் விறுவிறுப்பாகவும் நடைப்பெற்றது. பொது மக்கள் அஞ்சாமல் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். 

தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சிதேர்தலில் சுமார் 80 சதவீதம் பதிவாகி உள்ளது. பதிவான வாக்குகளின் (நேற்று) முழுமையான விவரம் இன்று இரவு தெரியவரும் இவ்வாறு சோ.அய்யர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்