முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணிப்பேட்டையில் ராமானுஜர் அறக்கட்டளை சார்பில் ராமானுஜரின் 1000-வது ஜெயந்தி விழா!

செவ்வாய்க்கிழமை, 25 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

ராணிப்பேட்டையில் ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை சார்பில் ராமானுஜரின் 1000-ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழா முன்னிட்டு எம்.எப்.சாலையில் உள்ள சாந்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம், திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாராயணம் செய்து ரதயாத்திரை ஊர்வலமாக பஜனை கோஷ்ட்டிகளுடன் நடமனம் ஆடியும் ராமானுஜரின் பாடல்களை பாடியும் ஊர்வலமாக எம்.எப்.ரோட்டில் புறப்பட்டு எம்.பி.டி. ரோடு, நவல்பூர், முத்துக்கடை, கிருஷ்ணகிரி சாலை, வழியாக நகராட்சி திருமண மண்டபத்திற்கு வந்தடைந்தது.

 

ஜெயந்தி விழா

 

இதனை தொடர்ந்து ராணிப்பேட்டை நகராட்சி திருமண மண்டபத்தில் வைணவ மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவலிங்கம், தேவகுமார், சேஹாத்ரி ராமானுஜதாஸர், தென்னந்திய புரோகிதர் சங்க பொதுசெயலாளர் நரசிம்ம ஐய்யர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை சாந்த ஆஞ்சநேயர் கோயில் ஸ்தாபகர் ரமேஷ் பிரசாத் துவக்கிவைத்தார்.

இந்த வைணவ மாநாட்டில் ஆன்மீக பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் பாரத மக்கள் கட்சி தலைவர் ஜெய்சங்கர், சாந்த ஆஞ்சநேய ஆலய நிர்வாகி மூர்த்தி, தொழிலதிபர் ராஜேந்திரன், மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்