முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் அதிகமான அரசு பேருந்துகள் இயங்குகின்றன : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்

செவ்வாய்க்கிழமை, 16 மே 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்டத்தில் 50 சதவீதம் அரசு பேருந்துகள் இயங்குகின்றன என சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார். நேற்று(16.05.2017) தீரன் நகர், மலைக்கோட்டை, கண்டோன்மென்ட், வுஏளு டோல்கேட் ஆகிய அரசு பேருந்து கிளைகள் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையங்களை ஆய்வு செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

750 கோடி

போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று முதற்கட்டமாக ரூபாய் 750 கோடி வழங்கப்படும் என போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூலமாக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றித்தரப்படும்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 18 அரசு பேருந்து கிளைகள் உள்ளது. இவற்றில் 934 அரசு பேருந்துகளில் 450 அரசு பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்து காத்திருந்த நடத்துனர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

நாளை முதல் 100 சதவீத அரசு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகின்றது. பொதுமக்களுக்கு யாரும் எந்தவித இடையூறும் செய்ய கூடாது. பயணிகள் எந்தவித அச்சமுமின்றி பயணிக்க உரிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் அனைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி உடனடியாக பணிக்கு திரும்ப கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் தெரிவித்தார்.

ஆய்வின் போது திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார். அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் மணி, வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்