முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வால் நட்சத்திரங்கள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : கொடிய வால் நட்சத்திரங்கள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் என நாசா கூறுகிறது.

வால் நட்சத்திரங்கள்

சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தில்  முன்பு நினைத்ததை விட 7 மடங்கு மிகப்பேரிய வால் நட்சத்திரங்கள் உள்ளன அவை ஒரு நாள் பூமியை அழிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து உள்ளனர்.  விண்வெளி ஆய்வியல் விஞ்ஞானிகள்  நாசாவின் விண்கலத்திலிருந்து வால் நட்சத்திரங்களை ஆய்வு செய்துவருகின்றனர். சூரிய மண்டலத்தில் தூரத்து பகுதிகளில் சில வால் நட்சத்திரங்கள் உள்ளன. இவைகள் சூரியனில் இருந்து 186 பில்லியன் மைல்கள் தூரங்களுக்கு அப்பால் உள்ளது.

சூரியனை கடந்து ...

ஊர் கிளவுட் என்பது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய பகுதிகளிலிருக்கும் பனிக்கட்டி பொருள்களின் நீட்டிக்கப்பட்ட ஷெல் ஆகும். இதுவே 60 மைல் தூரம் வரை இருக்கும். இருப்பினும், வால்நட்சத்திரங்கள் ஒவ்வொரு 200 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியனை கடந்து செல்லும் இவைகள் ஆய்வு செய்ய கடினமானவையாகும்.

அழித்து இருக்கும்...

பாறை  மற்றும் பனிக்கட்டி உள்பட உமிழும் பொருட்களால் வால்நட்சத்திரங்கள் உருவாகின்றன. இவைகள் ஒரு மைல்கள் தூரம் அல்லது  பூமியை தாண்டி  இருந்து இருந்தால் கிரகத்தை அழித்து இருக்கும்.  உயிர் வாழ்க்கையையும் அழித்து இருக்கும். ஆஸ்ட்ரோனோமிக் பத்திரிகையில் வெளியிடப்பட்ட தகவலில் பல வால் நடசத்திரங்கள் சூரியனை விட்டு ஓர்ட் கிளவுட் விட்டு தூரத்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளன. என கூறப்பட்டு உள்ளது.

புதிய நுண்ணறிவுகளை ...

நாசாவின் விஸி விண்கலம்,  முழு வானத்தையும் ஸ்கேனிங் செய்து உள்ளது. இவை தொலைதூர  பயணிகளுக்கு புதிய நுண்ணறிவுகளை வழங்கியுள்ளது. சுமார் 7 மடங்கு நீண்ட கால வால் நடசத்திரங்களை  விஞ்ஞானிகள் கண்டறிந்து  உள்ளனர். இவை 0.6 மைல்ஸ்  அல்லது ஒரு கிலோமீட்டர் அளவை கொண்டு இருக்கின்றன.     கடந்த 8 மாதங்களில் ஆய்வாளர்கள்   முன்பு அறிவிக்கபட்டதை விட  பல நீண்ட கால வால்மீன்கள் மூன்று முதல் ஐந்து முறை சூரியன் கடந்து  உள்ளதாக  கண்டறிந்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து