முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடி 67வது பிறந்த நாள் : மம்தா பானர்ஜி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா :  பிரதமர் மோடிக்கு நேற்று 67வது பிறந்த நாள் ஆகும். இதனையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் வாழ்த்து தெரிவித்தார். அவர் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில்  வாழ்த்து செய்தியை தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநில கவர்னர் கேஷரி நாத் திரிபாதியும் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்தினை கூறினார். அவரது வாழ்த்துச்செய்தியில், பிரதமர் மோடி தலைமையில் தேசம் மிகச்சிறந்த பலனைப்பெற்றுள்ளது . அவர் நீண்ட காலம்  ஆரோக்கியமாக வாழ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  பிரதமர் மோடியின் பிறந்த நாளை பா.ஜ.க. நேற்று சேவை நாளாக கொண்டாடியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து