முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருந்தாளுனர் படிப்பில் சேர விண்ணப்பம் விநியோகம் வரும் 5ம்தேதி கடைசிநாள்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. - 28 - மருத்துவ கல்வித் துறையின் தேர்வுக் குழு மூலம் 2 புதிய படிப்புகளில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் விற்கத் தொடங்கின. பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் மருந்தியல் பட்டயப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.  அவர்கள் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல் அல்லது கணிதம் படித்த மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். மொத்தம் 240 இடங்கள் உள்ளன. இவை மதுரை அரசு மருத்துவ கல்லூரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ளன.  மேலும் மருத்துவ சமூக சேவை படிப்பு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரியில் உள்ளது. இதில் 15 இடங்கள் உள்ளன. எம்.ஏ. சமூக சேவை அல்லது எம்.எஸ். டபிள்யூ படித்தவர்கள் எம்.பில் சேர தகுதியுடையவர்கள். டிசம்பர் 2 ம் தேதி வரை விண்ணப்ப படிவத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 5 ம் தேதி மாலை 5 மணிக்குள் கீழ்ப்பாக்கம் மருத்துவ தேர்வுக் குழு அலுவலகத்திற்கு சென்றடைய வேண்டும். இந்த தகவலை மருத்துவ தேர்வுக் குழு செயலாளர் டாக்டர் ஷீலா கிரேன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்