முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறை கைதிகளுக்காக டெலி மெடிசன் திட்டம் : இலங்கையில் அமலுக்கு வருகிறது

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு : இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகள் ஸ்கைப் தளத்தைப் பயன்படுத்தி சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளும் டெலி மெடிசன் எனும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.  இந்த திட்டம் சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட உள்ளது.

சிறைகளில் உள்ள கைதிகள் சிலருக்கு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகள் தேவைப்படுகிறது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிறப்பு மருத்துவர்கள் சிறைச்சாலைக்குள் வந்து கைதிகளை பார்வையிட மறுப்பு தெரிவிக்கின்றனர். மேலும், கைதிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன.

இதன் காரணமாக, இணைய வழி காணொளி காட்சி மூலம் சிறப்பு மருத்துவர்கள் கைதிகளுக்கு சிகிச்சை ஆலோசனை வழங்கும் திட்டத்தை தொடங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சிறைக் கைதிகள் தங்களது சுகாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணலாம். இவ்வாறு ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தேனிய தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து