முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்கா மீது பொருளாதார தடை அரபு நாடுகள் அதிரடி திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஜெருசலேம்: ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா மீது பொருளாதார தடை விதிக்க அரபு நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜெருசலேம் பகுதியை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு பல்வேறு நாட்டு முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் அரபு நாடுகள் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டு வர இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. லெபனான் இதற்கான முன்னெடுப்பை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

ஜெருசலேம் தொடக்கத்தில் முழுமையாக பாலஸ்தீனத்தில்தான் இருந்தது. தொடர் போரின் காரணமாக ஜெருசலேம் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. ஆனாலும் டெல் அவிவ் என்ற பகுதியே இஸ்ரேலில் தலைநகராக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு இஸ்லாமிய நாடுகளிலும் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. தற்போது லெபனான் எல்லாவற்றிற்கும் ஒரு படி மேலே போய் அமெரிக்கா மீது பொருளாதார தடை கொண்டுவர இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்படி அமெரிக்காவிற்கு எண்ணெய் பொருட்கள், ஆடைகள் ஏற்றுமதி செய்யக்கூடாது என்று நிறைய தடைகளுக்கு திட்டமிட்டு இருக்கிறது. மற்ற நாடுகள் மீது பொருளாதார தடை கொண்டு வரும் அமெரிக்கா மீது லெபனான் பொருளாதார தடை கொண்டு வர திட்டமிட்டு இருப்பது தற்போது உலக நாடுகள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. லெபனானின் கோரிக்கைக்கு அரபு நாடுகள் ஆதரவு அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து