முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்டா பாசனத்திற்கு 7 டி.எம்.சி தண்ணீர் திறக்க சித்தராமையாவுக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  தமிழக விவசாயிகளின் பாசனத்திற்கு 7 டி.எம்.சி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் பயிர் பாசனத்திற்காக கர்நாடக அரசு குறைந்த பட்சம் 15 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரியுள்ளார்,

டெல்டா விவசாயிகளின் நலனுக்காக கர்நாடகா உடனடியாக 7 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கான எஞ்சிய காவிரி நீரை 2 வாரங்களில் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாசனங்கள் முடிந்துள்ள நிலையில் அங்குள்ள அணைகளில் 40.82 டிஎம்சி தண்ணீர் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார். மேட்டூர் அணையில் 21.27 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தண்ணீர் உள்ளது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆகவே உடனடியாக தண்ணீரை திறந்துவிடுமாறு சித்தராமையாவை முதல்வர் எடப்பாடி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து