முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வை அறியும் கருவி பொருத்தும் இடம் தேர்வு

புதன்கிழமை, 20 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணையில் நில அதிர்வை கண்டறியும் சீஸ்மோ ஆக்சிலரி மீட்டர் கருவியை பொருத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி மிக சிறிய அளவு நில அதிர்வு ஏற்பட்டால் கூட அதனை கண்டறியும் வகையில் அதிர்வை கண்டறியும் சீஸ்மோ ஆக்சிலரி மீட்டர் கருவியை பொருத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ. ஒரு கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதனை பொருத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய புவியியல் ஆய்வு மைய தலைமை விஞ்ஞானி நாகேஸ்வரராவ் அணைப்பகுதிக்கு வந்து பார்வையிட்டார். அதை தொடர்ந்து மெயின் அணையின் கேலரி பகுதியில் இக்கருவியை பொருத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கருவியில் பதிவாகும் விவரங்கள் சாட்டிலைட் மூலம் ஐதராபாத் புவியியல் ஆய்வு மையத்தில் பதிவாகும். அங்கிருந்து திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையத்துடன் இணைக்கப்படும். இப்பணி நிறைவடைந்தவுடன் நில அதிர்வுகளை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானி நாகேஸ்வரராவ் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து