முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

வியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் வரி செலுத்தாதோர் அபராதம் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

நடப்பு ஆண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருமான வரியை குறைப்பதற்காக வரி ஆதாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உச்சவரம்புக்கு கீழ் வருமானம் இருந்தாலும் இந்த ஆண்டு, வருமான வரி கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்.

இதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இன்றைக்குள் வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால், அபராதம் கட்ட வேண்டி வரும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

மேலும் இன்று நள்ளிரவு 12 மணியை தாண்டி தாக்கல் செய்யப்படும், அனைத்து கணக்குகளுக்கும் அபராதம் விதிக்கப்படும். 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் இருப்போர் ரூ. 1,000 தாமத கட்டணமும், ஐந்து லட்சத்துக்கு மேல் வருமானம் இருப்பவர்கள்  ரூ.5,000 தாமத கட்டணத்துடன், டிசம்பர் 31-க்குள் கணக்கு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து